கண்ணாளனே
மலர்மதி
“உனக்கு கொஞ்சங்கூட கடவுள் பயம் இல்லையா?”
“பயந்தால் அனுபவிக்க முடியாது தலைவா!”
“அடப்பாவி!”
மாயநிழல்
அன்பாதவன்
அப்போதுதான் தொடங்கியது அந்த வாதை !.
என்னயிது..? ஏனிப்படி வியர்க்கிறது? வலது தோள் தொடங்கி இடது தோள் வரையில் மார்புப்பகுதியில் எரிச்சல் தொடங்கியது. எரிச்சலெனில் உள்ளுக்குள் யாரோ பெரியதொரு தீப்பந்தத்தால் சுடுவது போன்ற அனலெரிச்சல்... நெஞ்செரிச்சல்!
தேர்வு முடிவு
சுதா கணபதி
அர்ச்சனை முடிந்து வீட்டுக்கு வந்தும் ரிசல்ட் பற்றியே பேசிக்கொண்டு இருந்தாள். நடுவே சிநேகிதிகளோடு மொபைல் போனில் விசாரிப்புகள் வேறு. இரவெல்லாம் அப்பப்போ வாட்ஸ்அப், ஈமெயில் செக் பண்ணிக் கொண்டிருந்தாள்.
ஓ.கே. கண்மணி
விஜி சம்பத்
"என்னங்க...நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இந்த வாரக் கடைசில நான், நீங்க, சுமதி மூணு பேரும் நம்ம கிராமத்து வீட்டுக்குப் போயிடலாம். நீங்களும் ரிடையரானதில இருந்தே சொல்லிகிட்டு இருக்கீங்க இல்ல" என்றாள். தன் மனைவியின் உள்ளத்தை அணுவணுவாகப் புரிந்து கொண்டிருக்கும் சுந்தரத்துக்குத் தெரியாதா அவள் மனப் போராட்டம்?
ராட்சசி
லலிதா சங்கர்
"போதும்டா சாமி! இந்த வீட்டை ஒருவழியா வித்து முடிச்சுட்டோம்!" என்ற அவளின் உடலின் மொழி ரேவதிக்கு முதலில் புரியவில்லை. 'பெரிய மாடமாளிகையில் குடியிருக்கும் இவளுக்கு இந்த வீடு ஒரு பொருட்டில்லை போல..! நமக்குத்தான் அதோட அருமை தெரியும்' என்று நினைத்துக்கொண்டாள்.
செஞ்சோற்றுக் கடன் தீர
மாலா மாதவன்
“இல்லடா மணிகண்டா. உனக்கொரு நல்ல மனைவியும் எனக்கொரு நல்ல கணவனும் கிடைத்தால் நம் நட்பும் இப்படியே தான் இருக்கும்!”
“புரியாமல் பேசாத பானு. எந்த ஒரு ஆணுக்கும் தன் வாழ்வில் இன்னொரு ஆணை மனைவியின் முக்கியமான நண்பன் எனக் கைகாட்டும் போது சந்தேகம் தான் தோணும்.”
பகிர்வு
புனிதா பார்த்திபன்
"நான் என்னமோ பேச்சுக்கு கேட்டா, நீ அதான் பிரச்சனைங்குற! இதென்ன புது எண்ணம் ஈஸ்வரி? அன்புங்குறது காத்து மாதிரி எல்லா திசைகள்லையும் இருக்கணும். தன் மேல மட்டுமே அன்பா இருக்கணும்னு இங்க யாராலையும், எந்த உறவுக்குள்ளையும் நினைக்க முடியாதுல"
தியாகம்
உமா ஸ்வாமிநாதன்
பிரைவேட் கம்பெனியில் வேலை கிடைத்தது.தியாகு உழைக்க ஆரம்பித்தான். தங்கைகளை டீச்சர் ட்ரைனிங் படிக்க வைத்து வேலை கிடைத்ததும் ஒரே வீட்டில் அண்ணன் தம்பிக்கு பொண்ணு கேட்டு வந்தனர். கொஞ்சம் கடன் வாங்கி இரண்டு பேருக்கும் கல்யாணம் முடிந்து, பிறகு ஒரு வருடம் பூரா பண்டிகை சீர் செய்யவும் பிரசவ செலவு என்று கடன் ஏறி கொண்டே போனது.
அறிவுரைகள் விற்பனைக்கல்ல!
எம்.சங்கர்
“ அதெப்படி என்னை சிறப்பு பேச்சாளராக அழைத்து விட்டு வேறு ஒருவரை பேசச் சொல்லலாம். இது எனக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா..? “ எனக் கோபமாய்க் கேட்கவும், “சிதம்பரம் சார்.. தயவு செய்து கோபிக்காதீங்க. உங்களுக்கு ஒரு அவமானமும் இல்லை. ஏனென்றால் சிறப்பு பேச்சாளர் யார் என்று அறிவிப்பு செய்யலை.
விதியை மாற்றும் பெண்கள்
பிரேம ராகவி
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சீதா, பூங்கோதை செல்ல தயார் ஆனதும் "ஒரு நிமிடம் பூங்கோதை. உன் கூட கொஞ்சம் பேசணும்" என்று கூறி தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது பௌத்திரி, கயல் விழியின் உறக்கம் கலையாதவாறு தன் கணவன் ரகுராமிடம் கொடுத்தார்.
புரிந்தது
மலர்மதி
அதுக்காக அவங்களை எப்படி வேணாலும் விட்டுட முடியுமா? அவங்களையும் நாம் ஒழுங்கா வளர்க்க வேணாமா? மூத்தவன் ஃபைனல் இயர்ல இருக்கான். இன்னொருத்தன் செகெண்ட் இயர்ல படிக்கிறான். பூங்கொடி டீன் ஏஜ்ல இருக்கா. பாக்கறதுக்கு அழகா வேறு இருக்கா. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடக்கூடாதில்லையா? அதனால்தான் அவளை நிறுத்தினேன்.
யார் சிறந்தவர்கள்?
மணிமேகலை இராஜாராம்
நான் மனீஷாவின் வகுப்பில் மட்டும்தான் அமரவில்லை, மற்றபடி எனக்கு அவளைவிட அழுத்தம் அதிகமாகவே இருந்தது. இருப்பினும், இந்த உழைப்பிற்கு மற்ற ஆசிரியர்களிடமிருந்து அதற்கான மதிப்பும், ஊக்கமும் கிடைக்காதது மனீஷாவுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது.
குருவிக்கூடு
தி.வள்ளி
"கண்ணா கீர்த்தனா! கிட்டவாடா" என்ற சங்கீதா, "இப்படி அம்மா பக்கத்துல உக்காரு..." என மகளைத் தன் பக்கத்தில் அமர்த்தி "நீ சமத்தா இருக்கனும்.. நல்ல படிக்கனும்.. என்னுடைய ஆசை எல்லாம் நீ வெளிநாட்டில் படிச்சு, பெரிய வேலைக்குப் போகனும். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எக்காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் படிப்பை மட்டும் கைவிடக்கூடாது.
காதலிக்க நேரம் உண்டு
சுதா திருநாராயணன்
ஒரு ஜாக்பாட் அடித்தது விவேக்கிற்கு. ரம்யா வீட்டில் வந்திருந்த விருந்தினர்கள் எல்லோரும் எங்கோ புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள். தன் வீட்டு வாசலில் மறைந்திருந்து அம்மா பார்க்காத வண்ணம் சட்டென்று ரம்யா வீட்டு கேட்டை திறந்து கொண்டு நுழைந்தான் விவேக்.
நிலை மாறும் உலகில்…
கார்த்திகேயன் மாதயன்
ஜங்ஷன் வாசலில் இறங்கிய பெரியவர் 200 ரூபாயைக் கொடுத்த கையோடு மீதம் வாங்காமல் அவசரமாய் அங்கிருந்து சென்று விட்டார்.
'50 ரூபாயை வாங்கமலே போயிருச்சே பெருசு.' என நினைத்தபடி பின் இருக்கையைப் பார்க்க அங்கே பெரியவர் மறந்துவிட்டுப் போன பை இருந்தது.
குருட்டுக் கோழிகள்
புனிதா பார்த்திபன்
"குருட்டுக் கோழிங்களா! எத்தனை இரை சிதறிக் கிடக்குது? அதக் கொத்த வேண்டியது தான. கிடைக்காததுக்கு சண்ட போட்டு வெறும் வயித்தோட போகப் போறீங்க. கிடைச்சத எடுத்துக்கத் தெரியாத மக்குகளா!”
ஜாடை
ஷோபனா நாராயணன்
முதல் பிரசவமா..பயம் வேணாம் எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று சிரித்த அந்த இளம் நர்ஸின் முகத்தைப் பார்த்து ஒரு கணம் இவள் யார் ஜாடையாய் இருப்பாள்? ஒரு வேளை இவளுக்கும் அவள் அத்தை ஜாடையா என்று குழம்பினேன்.
ரசிக்கும் சீமானே
ஆர்.வி.சரவணன்
செக்யூரிட்டி “வேலை முடிஞ்சதுல்ல. கிளம்புங்க...” பாலுவிடம் சொல்லவே காம்பௌண்டுக்கு வெளியே வந்தான். வெயில் சுட்டெரிக்க, பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து தன் அப்பாவுக்கு போன் செய்தான்.
உள்ளே... "சார் ரொம்ப தேங்க்ஸ். உங்க மேல பைத்தியமா இருக்கான். அதிலிருந்து அவனை வெளியில் கொண்டுவரணும்னு நினைக்கிறேன். முடியல" கண் கலங்கினார் சுந்தரமூர்த்தி.
ரஸவாதம்
அப்பு சிவா
அந்த சக்தி என்னைபார்… என்னைபார்ன்னு ஓயாம கூச்சலிட்டுக்கிட்டே இருக்கு. அத கவனித்தது சில ஞானிகள் மட்டுமே. அதிலும் அதை மொழியால் சொல்ல இயலாமல், உணர்ந்துக்கோங்கன்னு சொல்லிட்டு அவங்க போயிட்டாங்க. ஆனா… ஒரு தேர்ந்த அறிவியலாளன் இந்த ஞானத்தையும் உணரும்போது அங்கே சில விஷயங்கள் மனித மொழியில் சொல்றதுன்னா பிரம்மிப்பூட்டும் சில விஷயங்களை செய்யமுடியும்.
இலக்கியன்
அப்பு சிவா
அட நம்ம பெரியார எடுத்துக்கோயேன்... அவர் உடைக்காத கட்டா... அவர் சொன்னத எல்லாம், கொஞ்சம் கற்பனை கலந்து கதையா அடிச்சுவுடு பாக்கலாம்... உலக இலக்கியமெல்லாம் பிச்சை வாங்கணும்... “அரசியல் கலக்காம என்ன கூந்தலுக்கு இலக்கியம்.... நீ உண்மையா உலக இலக்கியம் படிச்சா அரசியல் இல்லாம இருக்காது பாத்துக்கோ... ஆனா நீ ஒரு பம்மாத்துக்குக்கு ரீல் அடிக்கறேன்றேன்... “
அகத்தின் வண்ணம்
அப்பு சிவா
மிகவும் விலைமதிக்கமுடியாத, அல்லது மீண்டும் பெறமுடியாத புதையல் என்பது இது போன்ற கணநேர சந்தோஷங்கள்தான். இதை வார்த்தையில் சொல்லி விளங்கவைக்க முடியாது. அந்த கைகாட்டுதலின் பரவசம் அதிகாலை இருளை விலக்கி மிகப்பிரளயமான வெளிச்சத்தை பாய்ச்சியபடி என் கண்களின் வழியே ஊடுருவி உடல் முழுதும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அதை, அந்த கண நேர அனுபவத்தை உணர்ந்தவர்களுக்கு தெரியும்.
போராளி
அப்பு சிவா
“டைம்பாஸ் போஸ்ட்லாம் வேற, நிஜ வாழ்க்கை வேற. ரெண்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு பால்கனிக்கு போய்விட்டான். இனி அவன் பெண்ணியப் போராளியாக அவதாரம் எடுத்து, கனவில் ஒரு ஆபத்பாந்தவனாக மாறுவான். பாரதியின் பேரனாக வீர உருவம் எடுப்பான். பெரியாரின் தோள்மேல் கைபோடுவது போல டிபி வைப்பான். போஸ்ட்டுக்கு வரும் லைக்ஸ், கமெண்டுகளில் மூழ்குபவனை இப்போதைக்கு எழுப்ப முடியாது.
ஜீவநதி
பரிவை சே.குமார்
நல்லநாள் பெரியநாள்ன்னா அவளோட அண்ணன் மகாலிங்கந்தான் அவ செலவுக்குன்னு காசு கொண்டாந்து கொடுத்துட்டுப் போவான். அவனுக்கு கிளியை வளர்த்து பூனைக்கிட்ட கொடுத்துட்டோமேன்னு ஒரு வருத்தம். அவனோட பொண்டாட்டி கூட அவளுக்குச் சேலை எடுத்தா இவளுக்கு ஒண்ணுன்னு எடுத்துக் கொடுத்து விடுவா.
அன்பின் ஆழம்
கமலா முரளி
இருவர் குடும்பமும் வசதி மிகச் சுமார் ரகம் தான். ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்குவதற்குக் கூட ’எங்க வீட்டுப் பிள்ளை’ எம்ஜியார் போல “உண்ணாவிரதம் ஓங்குக” என்று போராடக்கூடிய நிலை.பள்ளியின் கால்பந்து குழுவில் இடம் பிடிக்கும் ஆசை வந்தது… இருவருக்கும் தான்.எஸ்.ஜே சார் விசிலுக்கு மகுடிக்குக் கட்டுண்ட நாகம் போல இயங்குவார்கள்.
மூன்றாம் பாலினம்
இத்ரீஸ் யாக்கூப்
"இன்னும் எவ்வளோ நேரம் ஆகும்? சீக்கிரம் லக்ஷ்மியை கண்ணுல காட்டுங்க. அப்படியே அவ கண்ணுக்கு மை கொஞ்சம் அதிகமா போடுங்க. அது அவளுக்கு இன்னும் அழகா இருக்கும்" என்றேன் லக்ஷ்மி இருக்கும் அறை கதவை தட்டியபடி. நான் சொன்னதற்கு உள்ளே ஒரே சிரிப்பு சத்தம்...
சதிஷ்குமார்
‘சார் காதல் என்றாலே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே உண்டான மோகம்ன்னு தப்பா நினைக்கிறாங்க சார். அது இல்ல. காதலுக்கு பல பரிமாணம் இருக்கு, அன்பு, பாசம், நேசம், உதவி. உதாரணத்திற்கு பசிக்கு சாப்பாடு வாங்கித்தர துடிக்கும் மனசு, உயிர் பிழைக்க சற்றும் யோசிக்காம உதவுற மனசு, முன்ன பின்ன அறிமுகம் இல்லாத நபர்களிடம் நாம் காட்டும் கனிவு, உறவுகளிடம் நாம் காட்டும் பாசம் என எல்லாத்துக்கும் பின்னாடி இருக்கிறது காதல் தான் சார்.
பால்கரசு
‘எடுத்ததுக்கெல்லாம் நம்மகிட்ட கேட்ட பயலுக இப்ப எதையுமே கேட்க மாட்டேங்கிறானுங்க… பெருமாளு மட்டுமில்லாம எல்லா எளவட்டங்களும் இப்ப நம்மள மதிக்க மாட்டேங்கிறானுங்க… எல்லாத்துக்கு நீ சொன்னா சரியா இருக்கும்ன்னு நின்ன ஊரும் அவனுக பின்னாடி நிக்க ஆரம்பிச்சிருச்சுக… காரணம் என்னவாயிருக்கும்..? இல்லை குருவம்மா அடிக்கடி நம்ம தோட்டத்துக்கு வர்றதை இந்தப் பயளுக பார்த்துப்புட்டானுகளோ…? இல்ல அந்தப் பனங்குட்டிப் பிரச்சனையில மொங்காருக்கு ஒருதலைப்பட்சமா நடந்து கொண்டதால நமக்கு எதிராத் திரும்பிட்டானுங்களா..?''
கமலா முரளி
“பண்டிகை அன்னிக்கி நடமாடினாப் போதும் .. அறுவடைத் திருவிழா, பட்டபிஷேக நாள் …அப்போ சிரிச்சி நாலு பேரு கிட்ட பேசுற மாதிரி இருக்கணும். “
“நிச்சயமா, நல்லா ஆயிடும் சிந்தா… சிந்தனையே வேண்டாம்”
கன்னத்தில் முத்தமிட்டாள்
பிரேம ராகவி
வீடு முழுவதும் உறவினர்கள், நண்பர்கள். இத்தனை பேர் என்னை சூழ்ந்திருந்த போதிலும் லக்ஷ்மியையே என் விழிகள் தேடியது. அதிலும் அவளுக்கென்று நான் பல கடைகள் ஏறி இறங்கி தேர்ந்தெடுத்த மயில் நீல பட்டுப் புடவையில் எப்படி இருப்பாள் என்று காண ஆவல் கூடியது. குறைந்தது ஆயிரம் முறையாவது அந்த புடவையில் அவளை எண்ணிப் பார்த்திருப்பேன்.
சக்தி
ஒன்று சிறிது நேரமாவது அவர்கள் ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு தலைப்பு பற்றி உரையாட வேண்டும் என்று திட்டத்தோடு செயல் படுத்தியும் வந்தனர். காதல், நட்பு, காலம், கடமை, பொறுமை, பெண்மை, பூக்கள், வெறுப்பு, கோபம், இயற்கை, ஏமாற்றம், வலி , தனிமை, இசை, புகழ், புத்தகம், தமிழ் என சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு அவர்களின் உரையாடல்கள்.. நேரம் சிறிதெனினும், விவாதங்கள் ஒன்றும் மறக்கமுடியாத அளவிற்கும் என்றும் நினைவு படுத்தும் அளவில் இருந்தன.. !