பாலமுருகன். லோ
நிறத்தை வைத்துப் பாகுபடுத்திப் பெண்களைப் பார்க்கும் கும்பல் இன்னும் இவ்வுலகில் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது வாழ்வு இவ்வுலகி நிலைத்து நிற்கிறதா அல்லது சின்னாபின்னமாக மாறி விடுகிறதா என்பதைப் பேசுவதுதான் கதையின் களம்.
பாலாஜி பாஸ்கரன்
பூவார் சென்னி மன்னன் – பாடல் தொடங்கும் முதல் இசையாக பலமாக ’டம்’மென கேட்கும் டிரம் இசை. முன்பு சொன்னது போல எத்தனை அழுத்தங்களால் நாம் இறுகியிருந்தாலும், இந்தப் பாடலைக் கேட்கத் தொடங்கியவுடன் முதல் ஒலியிலேயே ”ஒன்னுமில்லப்பா, பதறாத, ஒக்காரு ஒக்காரு பாத்துக்கலாம்” என்பதைப் போல ஒரு ஆறுதல்…
சென் பாலன்
ஆங்கில கவ் பாய் படங்களில் காட்டுவார்களே மணலில் பாதி புதையுண்ட மாட்டின் எலும்புக் கூடு, அதைப் போன்றதொரு பாலைவனம். கண்ணுக் கெட்டும் தூரம் வரை பொட்டல்வெளி. திடீரென சாலையின் ஓரங்களில் குவியும் மணல் காரின் சக்கரங்களை வாரிவிடும். இதனால் பயண வேகமும் குறைந்துவிடும்.
மனிதன் பகட்டாக ஆடம்பரமாக வாழ மட்டும் விரும்புவதில்லை. அப்படியான தனது வாழ்வை பிறர் அறிய வேண்டும் என்றும் விரும்புகிறான். வாழ்க்கை என்பது மிகக் குறுகிய காலம் தான். அதில் பணம் சேர்ப்பது மட்டும் குறிக்கோள் அல்ல. செளகரியத்திற்காக பணம் தேவை என்றாலும் எதையும் செளகரியமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் மகிழ்ச்சி தானாக வந்துவிடும்.
பாடல் முழுக்க ரஜினியும் மாதவியும் பேசிக் கொண்டே ஊட்டியை நடந்தே சுற்றி வருகிறார்கள். ரொம்ப நடந்துகிட்டே இருக்காங்களே என்று சில இடங்களில் இயக்குநர் அவர்களை அமர வைக்கிறார். நிற்கவும் வைக்கிறார். ஆக மொத்தத்துல நம்மை ரசிக்க வச்சிடறார். (ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சில காட்சிகள் மீண்டும் வருகிறது)
ஹொக்கு(Hokku). இதுதான் ஹைக்கு(Haiku) என்று 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் புலவர் மஸாவொகா ஷிகி (Masaoka Shiki) அவர்களால் பெயரிட்டப்பட்ட பாவகையின் மூலப்பெயர். கி.பி 1356இல் புலவர் நிஜோ யொஷிமொதோ (Nijou Yoshimoto) என்பவர் ரெங்கா (Renga ரென் - தொடர், கா - கவிதை) எனும் தொடர்கவிதை வடிவத்தை உருவாக்கினார்.
சென் பாலன்
அதிக வேலைப்பளு, முதலீடு, செலவு காரணமாகத்தான் இந்திய உணவகத்தின் விலைகளும் அதிகமாக உள்ளன. 2000 ரூபாய் இல்லாமல் குடும்பமாக டின்னர் செல்வதற்குப் பதில் வியாழக்கிழமை சாய்பாபா கோவில் வாசலில் உட்காரலாம். குறைந்த விலையில் பசியாற தரமான உணவு எங்குமே கிடைப்பது இல்லை.
சர்வைவலுக்கு தொடர்பே இல்லாத உணவு முறையில் தற்போது சிக்கியுள்ளோம்.
வெங்கட் நாகராஜ்
சேஷராயர் மண்டபத்தில் இடது புற ஓரம் வரிசையாக இருக்கும் தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் உண்டு. அந்த வரிசையில் கடைசியாக இருக்கும் தூண் அருகே அமர்ந்து கொண்டு அந்தத் தூணில் இருக்கும் சிற்பங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். நடுநடுவே நான் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே வந்த சில பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொல்ல வேண்டியிருந்தது
கமலா முரளி
சுமார் முப்பது வருடங்களுக்கு முன் , குழந்தைகள் பள்ளிக்கு சென்று , பாடங்களைப் படித்து, தேர்வு எழுதுவது மட்டுமே தலையாய பணியாக இருந்தது.
ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளை ஊக்குவித்து, அவர்கள் கவனமாக படிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால், குழந்தைகளின் மனதைச் சிதைக்கும் அளவு அழுத்தம் தர மாட்டார்கள்.
அபுல்கலாம் ஆசாத்
உள்ளங்கையில் உலகை வைத்துக்கொண்டு வேண்டிய தகவல்களையும், மனமகிழ்வுகளையும் காணொலியாகப் பார்க்கும் வழக்கம் பரவலாக உள்ள் இந்தக் காலகட்டத்திலும், வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் தேவையை அறிந்து தேடிச் சென்று வாசிக்கிறார்கள். செய்தித்தாள்கள் தொடங்கி இலக்கிய இதழ்கள் வரை வாசகர்களுக்குக் குறைவில்லை. அச்சுப் பதிப்புகள், இணையப் பதிப்புகள், மின் நூல்கள், என எல்லா வடிவத்திலும் எழுத்துகள் வாசகரை வந்தடைகின்றன.
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
ஒருவனை ஒருநாள் ஏமாற்றலாம்! தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்ற சொலவடையே உண்டு. விஷயத்திற்கு வருவோம். ஏமாற்றம் அடைந்த வலியும் வேதனையும் ஏமாற்றியவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை! ஆகா இன்று ஏமாற்றி பணம் கறந்தாயிற்று என்றோ வேறுவகையிலோ அவன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் ஏமாந்தவன் அடையும் வேதனை சொல்லொனாதது. அடடா! ஏமாந்துவிட்டோமே!
பெண்ணாகடம் பா.பிரதாப்
‘மனம் என்பது மனித உடலில் எங்குள்ளது?’ என்ற கேள்விக்கு இன்று வரை சரியான பதிலை யாராலும் கூற இயலவில்லை. மனம் பற்றி ‘சிக்மண்ட் பிராய்ட்’ முதல் பல உளவியல் நிபுணர்கள் ஆராய்ந்து பல அனுபவ ரீதியான கருத்துக்களை கூறியுள்ளனர், கூறியும் வருகின்றனர். ‘உன் மனசை தொட்டு சொல்லு?’ என்று ஒருவர் மற்றவரிடம் கேட்கும் போது, தன் நெஞ்சில் கை வைத்து;அதாவது மனம் என்ற ஒன்று இதய பீடத்தில் இருப்பது போல கூறுவர்.
நூர் பாத்திமா
மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடே சிந்திக்கும் திறன் தான். மனிதனின் சிந்தனைகள் தான் அவனை மிகச்சிறந்த படைப்பாளியாகவும், வியாபாரியாகவும், எழுத்தாளனாகவும், கவிஞனாகவும் மாற்றுகின்றன. ஆனால், இன்றுள்ள AI உலகம் மனிதனை சிந்திப்பதிலிருந்து தடுக்கிறது.
ஜெஸிலா பானு
• மாலை நேரம், வீட்டிற்குப் போகும் போது: ஒரு கடுமையான நாளை கழித்த சோர்வில், வீட்டுக்கு நீங்கள் செல்கிறீர்கள். குழந்தைகள் வீட்டுப் பாடத்தில் உதவி கேட்டு நிற்கின்றனர். மனைவியும் உங்களிடம் தன் அலுவலக வேலை சுமை பற்றிப் பேசுகிறார். இதனால் உங்கள் மனதில் பதட்டமும் சலனமும் அதிகமாகிறது. அப்படியில்லாமல் இந்தப் பொழுதை நீங்கள் சீராக்க முயற்சி செய்யலாம்.