அ. கௌரி சங்கர்
WriterSCafe - எழுத்தாளர் சங்கமம் நடத்திய உலகளாவிய சிறுகதை போட்டியில் பங்கு பெற்று, நடுவர்களால் பரிசுக்குரிய கதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து கதைகள் ‘நந்தனின் நாலு கட்டு வீடு’ என்ற சிறுகதை தொகுப்பாக வெளிவந்துள்ளது.. கதைகள் மாறுபட்ட கோணங்களில், வித்தியாசமான கருப்பொருட்களை மையப்படுத்தி எழுதப்பட்டவை.
இராம. சௌமியா
ஒரு விசயத்தை கலை நோக்கோடு அணுகி வாழ்வியலோடு கலந்து நாளடைவில் வெற்றிகரமாக அமைத்துக் கொடுக்கும் எழுத்து பாணி கொண்ட எழுத்தாளர் பரிவை சே. குமார் அவர்களின் எழுத்தில் உருவான ‘உன்மத்தம்’ ஒரு தகவல் களஞ்சியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
R.சுபாஷினி
புயலாக வீரப்பன் நுழைய, அவனைப் பிடிப்பதற்காக வரும் இரு மாநிலத்து காவல்துறையின் அட்டகாசங்கள் என விரியும் கதையை... ஐயோ... விவரிப்பதற்கும் கூட துணிவு வேண்டும். நகரத்தில் வாழ்வதாய் பெருமைப்படுகிறோம். இல்லை இது நரகம். வாழ்வில் மறக்க முடியாத நாவல். ஏன் படித்தோம் எனத் துவளச் செய்கிறது. கலைந்த குருவிக் கூடாய் அவர்கள் வாழ்க்கை. எல்லாவற்றையும் இழந்து உயிர் மட்டும் சுமந்து வாழ்வதோடு கதை முடிகிறது.
எஸ்.சரத்குமார்
அம்மக்கள் கடலை, தெய்வமாகவே பார்க்கின்றனர். கடலுக்கு, 'கடலம்மா' எனும் பெயரை வைத்து வழிபடுகின்றனர். கடலுக்குள் செல்கின்ற மீனவனின் உயிர், ஒழுக்கம் தவறாது கரையில் வாழும் அவனுடைய மனைவியிடம் தான் இருக்கிறது என அவர்கள் நம்புகின்றனர். அதாவது கணவன் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும்போது, கரையில் இருக்கும் அவனுடைய மனைவி, அவளுடைய கற்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நூருல் இர்ஃபான்
பேயிடமிருந்து ஆரச்சாலையை மீட்டெடுப்பதற்கு திருவின் பைக் ஓட்டம், திரு பைக்கில் செல்வதைப் படிக்கப்படிக்க அவனைப் பைக்கிலிருந்து இறக்கிவிட்டு நான் பைக் ஒட்டுகின்றேன் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.
இராம. சௌமியா
ஓவியாவிற்கு ஒருவருடைய கண்ணைப் பார்த்து அவர் எண்ணுவதைச் சொல்ல முடியும் என்பதால் ஒவ்வொரு குறிப்புகளின் மூலமாக ஒவ்வொன்றையும் கண்டுபிடித்து, நான்கையும் ஒன்றிணைத்து அவர்கள் நினைத்தது போல ஆண்டுவிழாவில் மாயாஜாலத்தை நிகழ்த்தினர்.
பரிவை சே. குமார்
வெள்ளைக் குதிரையில் அமர்ந்து இருக்கும் அறிவாசான் எனச் சொல்லி, அந்தக் கோவிலை தமிழகமெங்கும் கிளை பரப்ப வைத்துச் சம்பாரித்து வரும் ஒரு அமைப்புக்கும் கதைக்குமான தொடர்பைச் சொல்லி, வரலாற்று நாயகன், அவனின் வழித்தோன்றல்கள், அவனை வைத்து பணம் பார்க்கும் மனிதர்கள் என மூன்று புள்ளியை மிக அழகான கோலமாக மாற்றியிருக்கிறார் எழுத்தாளர். இதில் அந்தக் கோவில் பற்றி நாவலின் பல இடங்களில் வரும்போது உண்மையிலேயே இப்படி ஒரு கோவில் இருக்கும் போல அதைத்தான் இவர் தோலுரித்துக் காட்டுகிறாரோ எனத் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.
பால்கரசு சசிகுமார்
காவல்துறையில் பிடிபட்டவுடனேயே தான் செய்த திருட்டுக்களை ஒப்புக் கொள்வதுடன், பிறகு நீதிமன்றத்தில் தனக்காக எந்த வழக்கறிஞர்களையும் நியமித்துக் கொள்ளாமல் தானாகவே தன் வழக்கை குறுக்கு விசாரணைகள் செய்து நீதிபதிகளையும், காவல்துறையினரையும் தன்னுடைய வாதத்திறமையால் திணறடிக்கிறார். சில இடங்களில் நீதிமன்றமும், காவல்துறையும் இவருடைய குறுக்கு விசாரணைகளுக்கு முன் தோற்றுப் போய்விடக் கூடாதென்று சமரசம் செய்துகொள்கிறது. திருட்டுத்தொழில் மூலமாகக் கிடைத்த பணத்தின் பெரும்பகுதியை இவர் விலைமகளிருக்காகவே செலவு செய்கிறார்.
பாலமுருகன். லோ
இந்தச் சமூக நாவல், எழுத்தாளர் அகிலன் அவர்களால் எழுதப்பட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இளைஞர்கள் வெள்ளையரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட, ‘காந்தியம்’ என்ற வெள்ளத்தில் குதித்துத் தீமையைச் சாடப் புறப்பட்டதையும், காந்தியடிகளின் உபதேசத்தின் வழியில் அவர்கள் நடந்துகொண்டதையும், அவர்கள் மனதில் உத்வேகம் பிறந்ததையும் எழுத்தாளர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். வழக்கமாக ஒரு கதையில் மூன்று அல்லது நான்கு முதன்மைக் கதாபாத்திரங்கள் இருப்பார்கள். ஆனால், இந்த நாவலில் பல கதாபாத்திரங்கள் வலம் வருகின்றனர்.
பிலால் அலியார்
புனைவின் நாயகனாக மாரிமுத்து தன்னுடைய இயல்பான குணத்தை, வாழ்வியலை இழந்து விட்டு சமூகத்திற்காக மட்டுமே வாழ ஆரம்பிக்கும் நிலையை வாசகன் உணரும் போது சமூகம் என்பது ஒரு கொடூர வன்னுணர்வு மைதானமாகவும், நாம் அதில் பந்தாடப்பட்டும் ஒரு பந்தாகவும் சுற்றி வருகறோம் என நம்மையறியாமலேயே அறிந்து கொள்ளும் நிலையை படைப்பு உருவாக்குகிறது..
இராஜாராம்
காஃப்டா, என்பது ஒரு சடங்கின் பெயர், இது பெண் பிள்ளைகளுக்கு செய்யும், ஒரு கொடுரமான சடங்கும் கூட. அதை மையப்படுத்தி எழுதப்பட்ட அருமையான நாவல். இந்த சடங்கு சம்பிரதாயம் நடக்கும் இடம் ஆப்பிரிக்கா கண்டத்தில் நடக்கிறது. பழங்குடி மக்கள், காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் பெண் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட பருவத்தில் ஊரைக் கூட்டி பெரும் திருவிழாவாக கொண்டாடி, ஒயித்தா மாமிகள் என்ற பெண்களால் இந்த சடங்கினை செய்கிறார்கள்.
சௌமியா இராஜாராம்
வண்ணம் என்ற சொல் அழகு, இசை, ஒழுங்கு என்ற பொருள்களைத் தந்தது. ஆனால் அதுவே இக்காலத்தில் நிறவெறியாக உருவெடுத்துள்ளது. கறுப்பின மக்கள் வெள்ளைக்கார மக்களிடம் பெற்ற அவமானங்களை இது நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. அதேபோல் கறுப்பாக இருப்பவன் கீழ்சாதிக்காரன் என்றெல்லாம் நிறவெறி உருவெடுத்தது, ஆனால் உண்மையில் கறுப்பு என்பது அழகுக்குரிய நிறமாகவும், கறுப்பு என்றால் ‘கருத்த’ என்ற பொருளிலும் அமைந்து வருகிறது.