நானும்
அவளை அருகில் விட்டுவிட்டு
அளவளாவத் தொடங்கியிருந்தேன்...
’மரங்களைத் தொலைத்த
மனிதகுலம் மண்ணாகுமென்று…
அசட்டை செய்துவிட்டதாய் எண்ணி
அகன்றுவிட்டாள் போலும்..
அதன்பின் அவள் வரவேயில்லை..
--
செழியன், மதுரை
கைய்யாமின் பழைய கோப்பை ஒன்றில்
அவளோடு கூடிய ஓட்கா இரவொன்றில்
அறையெங்கும்
இறகின் முனையிலிருந்து
விழுந்த துளிகள் பெரும் சுனையானது
முத்தங்கள் மூழ்கிக் களித்த பொழுதொன்றில்
அறை கடலானது
--
அம்மு ராகவ், தேனி
பூதம் கிடைத்ததும்
ஆட்டமாய் ஆடினர்
ஆரம்பத்தில் விதவிதமாய்
வரம் கேட்டு மகிழ்ந்தனர்.
இன்னும் பூதம்
கிடைக்கப் பெறாதவர்களின்
பெருமூச்சு
--
ஈடித் ரேனா, புதுக்கோட்டை
மலர்களுக்கு வலிக்காமல் மெதுவாகக் கூட்டி
ஓரம் ஒதுக்கி வைக்கும் பாட்டியின் உடலெங்கும்
--
ஈடித் ரேனா, புதுக்கோட்டை
இந்த உலகம்
கண்ணீரைக் கேட்கும் முன்
காரணத்தைக் கேட்கிறது.
சோர்வுக்குக் கூட
ஒரு எடை இருக்கிறது போல...
--
பவானி சிம்ஹன், துபாய்
சமூக விலங்குகளுக்கிடையே சண்டை.
ஓயாத போர்.
மிகப் பெரிய போர்.
ஆண்டாண்டு காலங்களாக உயிர்வதைகள்.
--
ஹேமா, கொச்சி