அ.ஈடித் ரேனா
புதுக்கோட்டை
அ.ஈடித் ரேனா
புதுக்கோட்டை
கோடை வந்தால்
கொன்றை மரத்தின்
பொன் மஞ்சள் மலர்கள்
வாசல் எங்கும்
இறைந்து கிடக்கும்
காலில் மிதிபடக்கூடாதாம்
வாகன சக்கரத்தில்
நசுங்கி விடக்கூடாதாம்
மலர்களுக்கு வலிக்காமல்
மெதுவாகக் கூட்டி
ஓரம் ஒதுக்கி வைக்கும்
பாட்டியின் உடலெங்கும்
தாத்தாவிடம்
அடி வாங்கிய தழும்புகள்